6,574 காலிப்பணியிடங்கள்
இந்நிலையில் குரூப்-4 பணியிடங்களுக்கான அறிவிப்பினை டி.என்.பி.எஸ்.சி. இன்று (செவ்வாய்க்கிழமை) வெளியிட்டுள்ளது. இதன்படி அடுத்த ஆண்டு ஜனவரி 10ஆம் தேதி குரூப் 4 தேர்வுகள் நடைபெற உள்ளது. இதற்கான காலி பணியிடங்கள் எண்ணிக்கை 6,574 என அறிவிக்கப்பட்டுள்ளது. தேர்வுகளுக்கு விண்ணப்பிக்க கடைசி தேதி – 5.11.2026 ஆகும். நடப்பாண்டில் சுமார் 15 லட்சத்திற்கும் மேற்பட்டோர் விண்ணப்பிக்க வாய்ப்பு இருக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும் தேர்வாணைய இணையதளமான www.tnpsc.gov.in-ல் விண்ணப்பிக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.
கடந்த ஆண்டு குரூப்-4 பதவிகளில் 5 ஆயிரத்து 307 பணியிடங்களுக்கு அறிவிப்பு வெளியானது. இதற்கான எழுத்து தேர்வு கடந்த ஆண்டு ஜூலை மாதம் 12-ந் தேதி நடந்தது. இந்த தேர்வை எழுத 13 லட்சத்து 89 ஆயிரம் பேர் விண்ணப்பித்து இருந்ததில் 11 லட்சத்து 48 ஆயிரம் பேர் எழுதி இருந்தார்கள்.














Leave a Reply