20 வருட நட்பு : ஓடிடியில் வெளியான நயன்தாரா, கீத்து மோகன்தாஸ் படம்


கன்னடத்தில் யஷ் நடிப்பில் விரைவில் வெளியாக இருக்கும் படம் “டாக்சிக். இதில் நயன்தாரா கதாநாயகியாக நடிக்க, கியாரா அத்வானி உள்ளிட்ட இன்னும் நான்கு நாயகிகள் நடித்துள்ளனர். நடிகையும் இயக்குனருமான கீத்து மோகன்தாஸ் இந்தப் படத்தை இயக்கியுள்ளார். நயன்தாரா நடிக்கும் முதல் கன்னட படம் இது என்பதுடன், இந்தப் படத்தில் நடிக்க நயன்தாரா எப்படி ஒப்புக்கொண்டார் என்பது பலருக்கு ஆச்சரியமாக இருக்கலாம்.

நயன்தாராவும் கீத்து மோகன்தாஸும் கதாநாயகிகளாக அறிமுகமான காலகட்டத்திலேயே, அதாவது 2005-ல் மலையாளத்தில் வெளியான, மம்மூட்டி நடித்த “ராப்பகல்” என்கிற படத்தில் இருவரும் ஒன்றாக இணைந்து நடித்திருக்கின்றனர். இயக்குனர் கமல் இந்தப் படத்தை இயக்கியிருந்தார்.

அந்த சமயத்தில் நயன்தாரா தமிழில் “ஐயா”, “சிவாஜி” என பெரிய படங்களில் நடித்து வந்தாலும், இந்தப் படத்தின் கதைக்காக இதில் நடிக்க சம்மதித்தார் என்று படத்தின் இயக்குனர் கமல் கூறியுள்ளார். விரைவில் இந்த இருவர் கூட்டணியில் “டாக்சிக்” படம் வெளியாக இருக்கும் நிலையில், அந்தப் பரபரப்பின் மூலம் ரசிகர்களை ஈர்க்கும் விதமாக தற்போது இந்த “ராப்பகல்” படம் “மனோரமா மேக்ஸ்” என்கிற ஓடிடி தளத்தில் ஒளிபரப்பாகத் துவங்கியுள்ளது.



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *