வெற்றிப் பயண திட்டம்: எவ்வளவு தூரம் கட்டணம் இன்றி பயணிக்கலாம்?


முதலமைச்சர் விஜய் தொடங்கி வைத்துள்ள வெற்றிப் பயணத் திட்டத்தின் மூலம் சென்னை முதல் கன்னியாகுமரி வரை மகளிர் கட்டணம் இல்லாமல் பயணிக்க முடியும் எனும் நிலை உருவாகியுள்ளது.

திமுக ஆட்சியில் சாதாரண கட்டண நகரப் பேருந்துகளில் மட்டும் நடைமுறைப்படுத்தப்பட்ட இந்தத் திட்டம், வெற்றிப் பயணம் திட்டமாக விரிவாக்கம் செய்யப்பட்டுள்ளது.

அரசு விரைவுப் போக்குவரத்துக் கழகம் இயக்கும் நீண்டதூர சொகுசுப் பேருந்துகள், குளிர்சாதன பேருந்துகள் மற்றும் படுக்கை வசதி கொண்ட பேருந்துகளுக்கு இத்திட்டம் பொருந்தாது.

பிற பேருந்துகளில் மகளிர் விதி விலக்கு இல்லாமல் பயணம் செய்யலாம். பொதுவாக தமிழகத்தில் அரசு எக்ஸ்பிரஸ் பஸ்கள் 30 முதல் 100 கிலோ மீட்டர் தூரத்திற்கும், எல்.எஸ்.எஸ். பேருந்துகள் 30 முதல் 40 கிலோ மீட்டர் தூரத்திற்கும், டீலக்ஸ் பேருந்துகள் 30 முதல் 50 கிலோ மீட்டர் வரையும் இயக்கப்பட்டு வருகிறது.

இதை வைத்துக் கணக்கிடும் போது, சென்னையில் இருந்து பெண் ஒருவர் எக்ஸ்பிரஸ் பேருந்தில் பயணித்து, செங்கல்பட்டு, திண்டிவனம், விழுப்புரம், விருத்தாசலம், திருச்சி, திண்டுக்கல், மதுரை, விருதுநகர், கோவில்பட்டி, திருநெல்வேலி, நாகர்கோவில், கன்னியாகுமரி என மாறி.. மாறி.. இலவசமாக நீண்ட தூரம் செல்ல முடியும்.



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *