4. மூலதனத்தின் அளவு (Risk Capacity): பல நூறு, ஆயிரம் கோடிகளை வைத்திருக்கும் ஒரு முதலீட்டாளருக்கு, ஒரு பங்கி்ல் ஒரு கோடி நஷ்டம் ஏற்பட்டாலும் அது அவருக்குப் பொருட்டல்ல. ஆனால், சில ஆயிரம் ரூபாய் இழப்பே உங்களுக்குக் கணிசமான இழப்பாகவும், பாதிக்கக் கூடியதாகவும் இருக்கலாம்.
ஸ்மார்ட் காப்பி கேட்
கலை, இலக்கியம், நிகழ்த்துகலைகள் போன்றவற்றில் ‘காப்பி கேட்’ என்பது இழிவான சொல். தனித்துவம் அடிப்படை அலகாகவும், பெருமைக்குரியதாகவும் உள்ள சூழல் அது. ஆனால், முதலீடு போன்ற பொதுச் செயல்பாடுகளில் தனித்துவம் போன்ற அலகுகளோ, அழகியல் இலக்கணங்களோ கிடையாது; தேவையும் இல்லை. ஆனால், ‘ஈயடிச்சான் காப்பி’யாகக் காப்பியடித்து நஷ்டத்தை ஏற்படுத்திக்கொள்ளக்கூடாது.
உச்ச முதலீட்டாளர்களுடையதை மட்டுமல்ல; வேறு எந்த முதலீட்டாளர்களுடைய சிறந்த போர்ட்ஃபோலியோவை வேண்டுமாயினும் காப்பியடிக்கலாம்; ஆனால், ஸ்மார்ட்டாக!
உங்களைக் கவரக்கூடிய போர்ட்ஃபோலியோக்களை ‘முதலீட்டு மாடலாக’ப் பார்க்காமல், ஆய்வு மாதிரியாக மட்டுமே எடுத்துக்கொள்ள வேண்டும். அதுவே ‘ஸ்மார்ட் காப்பி கேட்’ அணுகுமுறை!














Leave a Reply