முதலமைச்சர் விஜய் குறித்து அநாகரீகமாக பேசிய நயினார் நாகேந்திரன்..!


சென்னை கமலாலயத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் முதலமைச்சர் விஜய் குறித்து பா.ஜ.க. மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் அநாகரீகமாக பேசிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சில நாட்களுக்கு முன் சட்டப்பேரவையில் முதலமைச்சர் பேசியதை சுட்டிக்காட்டி நயினார் அநாகரீகமாக பேசியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதேபோல், கடந்த பிப்ரவரியில் முதலமைச்சர் விஜய் மற்றும் நடிகை திரிஷா குறித்து அவதூறாக பேசியதற்காக நயினார் வருத்தம் தெரிவிதிருந்தார். 

இதனிடையே, நயினார் நாகேந்திரனின் அநாகரிக பேச்சுக்கு கண்டனம் தெரிவித்துள்ள அமைச்சர் ராஜ்மோகன், கட்சியின் தலைவர் போல் அல்லாமல் தெருமுனை பேச்சாளர் போல் நயினார் பேசுவதாக விமர்சித்தார்.

அரசியல் களத்தில் கருத்தை எதிர்கருத்தால் எதிர்கொள்ளத் திராணியில்லாதவர்கள் தான் தனிப்பட்ட தாக்குதலையும், அநாகரிகமான வார்த்தைகளையும் கையில் எடுப்பார்கள் என அமைச்சர் வினோத் விமர்சித்தார்.

மேலும், நயினார் நாகேந்திரன் தமது அநாகரிகமான பேச்சுக்கு மன்னிப்பு கேட்க வேண்டும் என வன்னி அரசு வலியுறுத்தியுள்ளார். 



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *